October 27, 2017
தண்டோரா குழு
இரட்டை குடியுரிமை கொண்ட ஆஸ்திரேலிய நாட்டின் துணை பிரதமர் பார்னாபை ஜோய்ஸ், தேர்தலில் போட்டியிட்டதால், அவரை தகுதி நீக்கம் செய்ய அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியநாட்டின் துணை பிரதமராக இருப்பவர் பார்னாபை ஜோய்ஸ். இரட்டை குடியுரிமை வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது ஆஸ்திரேலிய நாட்டின் சட்டம் ஆகும்.ஆனால், நியூசிலாந்து நாட்டின் குடியுரிமையை பெற்ற அவர்,தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக,அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், ஜோய்ஸ் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அந்நாட்டின் நீதிமன்றம், அவரையும் அதேபோல், இரட்டை குடியுரிமை கொண்ட ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய கட்சியை சேர்ந்த பியோனா நாஷ், ஓன் நேஷன் கட்சியை சேர்ந்த மால்காம் ராபர்ட்ஸ்ஆகியோரையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆஸ்திரேலியாவின் கிரீன்ஸ் கட்சியை சேர்ந்த லரிசா வாட்டர்ஸ், ஸ்காட் லுட்லாம் ஆகியோர் தங்கள் பதவியை கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்துவிட்டனர். இதனால், தற்போது அந்நாட்டின் அரசியலில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.