• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடிகர் கமலஹாசனின் உருவப்படத்தை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

January 6, 2018 தண்டோரா குழு

கோவையில் நடிகர் கமலஹாசனின் உருவப்படத்தை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இன்று(ஜன 6)ஈடுப்பட்டனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக கூறி கோவையில் நடிகர் கமலஹாசனின் உருவப்படத்தை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் தொடர் எழுதி வருகிறார்.இதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் டிடிவி தினகரன் ஆதரவு வழக்கறிஞர் பிரிவினர் கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்டன முழக்கங்களை எழுப்பிய வழக்கறிஞர்கள் கமலின் உருவப்படத்தை தீயிட்டு எரித்தனர்.மேலும்,நடிகர் கமல் தன் நடிப்பு தொழிலை மட்டும் பார்க்க வேண்டும் எனவும் அரசியல் குறித்து அவதூறு பரப்பக் கூடாது என வலியுறித்தினர்.

மேலும் படிக்க