• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று தொகுதிகளில் தேர்தலுக்கு வேட்பு மனு தொடக்கம்

October 26, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வது புதன்கிழமை (அக். 26) தொடங்கியது.

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தஞ்சையிலும்,அரவக்குறிச்சியிலும் தேர்தலை தலைமைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா முறைகேடு புகார் காரணமாக அங்கு நடைபெற வேண்டிய தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்து, தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் வாக்குப் பதிவு நவம்பர் 19ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மே மாதம் நடந்த தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சீனிவேல் மறைந்ததை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த மூன்று தொகுதிகளுக்குமான தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வது புதன்கிழமை தொடங்கியது.

அத்துடன் புதுச்சேரி மாநிலத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நெல்லித்தோப்பு தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.வேட்பு மனு தாக்கல் நவம்பர் 2-ம் தேதிவரை நடைபெறும். மனுக்கள் நவம்பர் 3 ஆம் தேதி பரிசீலிக்கப்படும். தகுதியான வேட்பாபளர்களின் பட்டியல் வெளியான பிறகு, போட்டியிலிருந்து விலகிக் கொள்வோர் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் வாக்குப் பதிவை அடுத்து, வாக்குகள் 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.இத்தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அதிமுக, எதிர்கட்சியான திமுக, பாமக ஆகிய கட்சிகள் மட்டுமே இதுவரை வேட்பாளர்களை அறிவித்துள்ளன. பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் போட்டியிட இருக்கின்றன.த.மா.கா. நிலை குறித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் மன்னன்:

முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அவகாசம் எடுத்துக் கொண்டு வேட்புமனுக்களைத் தா்ககல் செய்வர். சுயேச்சைகள்தான் பொதுவாக முதல் நாட்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வர்.
திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுவதற்கு சேலத்தைச் சேர்ந்த பத்மராஜன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் வேட்புமனு தாக்கல் செய்வது 177 முறையாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

தேர்தல் நடத்தும் அலுவலராக, அரவக்குறிச்சிக்கு கலால் துணை ஆணையர், தஞ்சாவூர் தேர்தல் நடத்தும் அலுவலராக, ஆர்.டி.ஓ., திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலராக, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் நெல்லித் தோப்பு தொகுதியில் போட்டியிடவும் வேட்புமனு தாக்கல் செய்வது தொடங்கியது.

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் வேட்புமனு தாக்கல் புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள, நெல்லித்தோப்பு தொகுதியிலும், இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி வரும் நவம்பர் 2 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஓம் சக்தி சேகர் போட்டியிடுகிறார்.

வேட்புமனுவில் திருத்தம் :

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவங்களில் வேட்பாளரின் புகைப்படத்தை ஒட்டுவதற்கும், ‘நான் ஒரு இந்திய குடிமகன், வேறு எந்த நாட்டின் குடியுரிமையையும் பெறவில்லை’ என்ற உறுதிமொழியை அறிவிக்கவும் சில திருத்தங்களை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது. அதன்படி, திருத்திய படிவங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவேண்டும்.

மேலும் படிக்க