August 31, 2018
தண்டோரா குழு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாய்மர படகு போட்டியில் கோவை வீராங்கனை வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பாய்மர படகு போட்டி நடந்தது.மொத்தம் 15 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் வர்ஷா கெளதம்,ஸ்வேதா ஷெர்வேகர் ஜோடி 44 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் படித்து வெள்ளி வென்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 13 தங்கம்,21 வெள்ளி,25 வெண்கலம் உள்ளிட்ட 59 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.மேலும், வர்ஷா கெளதம் தமிழகத்தின் கோவை மாவட்டத்தை சேர்ந்தவராவார்.இவர் 2014ல் இன்ச்சான் ஆசிய விளையாட்டில் வெண்கலம் பதக்கம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.