• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய வகை ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தயாரிக்க உதவும் எறும்புகள்.

July 8, 2016 தண்டோரா குழு

பொதுவாகப் பெற்றோர்கள் சிறு பிள்ளைகளுக்கு ஊறும் எறும்புகளைக் காட்டி அதைப் போல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அயராது உழைக்க வேண்டும் என்று கற்றுக்கொடுப்பர்.

கருப்பு நிற எறும்புகள் அதிகமாகக் காணப்படும் போது மலை வருவதற்கு நல்ல அறிகுறி என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவை மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தயார் செய்ய உதவுகிறது என்று நம்மில்

எத்தனைப் பேருக்கு தெரியும்?

மருத்துவ உலகுக்குத் தேவையான புதிய வகை ஆன்டிபயாடிக் மருந்துகளை இலைகளை உண்ணும் எறும்புகளின் மூன்று வகை இருப்பிடங்களில் இருந்து பெற முடியும் என்று கிழக்கு ஆங்க்லியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமெரூன் உலகில் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் புதிய வகை பக்டீரியா நோய்களுக்கு உரிய மாற்று ,மருந்துகளை விரைவில் கண்டுபிடிக்கப்படாவிட்டால் மருத்துவ உலகம் இருண்ட யுகத்துக்குத் தள்ளப்பட்டு விடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். அடுத்த சில நாட்களுக்குள்லேயே விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பின் அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.

மேலும், எறும்புகளின் இந்த இயல்பில் இருந்து ஏற்கனவே இரு புதிய வகை ஆன்டிபயாடிக் மருந்துகள் தயாரிக்கப்பட்டிருப்பதாவும் அந்தப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

அவர்கள் குறிப்பிட்ட இந்த இலையுண்ணும் எறும்புகள் ஒரு சில தனிப்பட்ட வகை பூஞ்சணத்தை (Fungus) உட்கொள்கின்றன. அப்படி உட்கொள்ளும் போது அவற்றில் இருக்கும் பக்டீரியாவில் இருந்து தமது உடலில் இயற்கையான ஆன்டிபயாடிக் உற்பத்தி ஆவதைக் கண்டனர். இதனால் இந்த எறும்புகள் உண்ணும் அதே வகைப் பூஞ்சணம் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு மருந்து தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும், இன்றைய உலகில் பக்டீரியாவால் ஏற்படும் பல புதிய வியாதிகள் அதிகரித்து வருவதுடன் அவை குணப்படுத்த முடியாத நிலையை அடையுமுன் தடுக்க புதிய ஆற்றல் மிக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ள மருத்துவர்கள் எறும்புகள் தாம் உருவாக்கும் இயற்கை பக்டீரியா எதிர்ப்பு மருந்தின் மூலம் எண்ணற்ற மனித உயிர்களைக் காப்பாற்றும் வழியை உருவாக்கி இருப்பதால் அவற்றுக்கு நாம் நன்றிக் கடன்பட்டுள்ளோம் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மேலும் படிக்க