• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகின் மிகப்பெரிய நாயாக கிரேட் டேன் நாய் அறிவிப்பு

July 28, 2016 தண்டோரா குழு

இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியிலுள்ள கிரேட்டேன் என்ற வகையைச் சேர்ந்த நாய் உலகின் மிகப்பெரிய நாயாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கவுள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் பிரையன் மற்றும் ஜூலி வில்லியம்ஸ் தம்பதியினரின் வளர்த்துவரும் இந்த நாய்க்கு தற்போது மூன்று வயது ஆகிறது.

இந்த கிரேட் டேன் நாய், அதன் பின்னங்கால்களைத் தூக்கினால் 7 அடி உயரத்திற்கு மேலாகவும் 12 கல் எடையுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நாய் நாளொன்றுக்கு 22 மணி நேரம் உறங்குவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுடன் நன்றாகப் பழகும் தமது நாய் தனது நிழலைப் பார்த்து தானே அச்சமடைவதாகவும் பிரையன் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க