• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வர்த்தக சீரமைப்பு செயல் திட்டத்தை அமல்படுத்துவதில் ஆந்திரப் பிரதேசம் முதலிடம்

October 27, 2016 தண்டோரா குழு

வர்த்தக சீரமைப்பு செயல்திட்டத்தை அமல்படுத்துவதில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்திலும் தமிழகம் 18 வது இடத்திலும் உள்ளன. இத்தகவல் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

36 மாநிலங்கள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் மாநிலங்கள் செயல்திட்டத்தை அமல்படுத்தியதன் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் 99.09 சதவீதத்துடன் ஆந்திரம் முதலிடத்திலும், தெலுங்கானா இரண்டாவது இடத்திலும் உள்ளன. 97.92 சதவீதத்துடன் குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ளது. 62.80 புள்ளிகளுடன் தமிழகம் 18-வது இடத்திலும், 86.90 புள்ளிகளுடன் கர்நாடக மாநிலம் 13-வது இடத்திலும் உள்ளன. தில்லி 47.02 சதவீதத்துடன் 19 வது இடத்தில் உள்ளது.

1.49 சதவீதத்துடன் புதுச்சேரி இந்த பட்டியலில் 26-வது இடத்தில் உள்ளது. 0.30 சதவீதத்துடன் லட்சத்தீவு 36-வது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க