• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்கர்களைத் தாக்குவோம்! ஒசாமாவின் மகன் எச்சரிக்கை

July 11, 2016 reuters.com

உலகையே ஆட்டிபடைத்து கொண்டிருந்த பயங்கர தீவிரவாத அமைப்பான அல்கெய்டாவின் தலைவர் ஒசாமா பின் லேடன். அவரைக் கொன்ற அமெரிக்காவையும் அதன் மக்களையும் பழிவாங்க போவதாக ஒசாமாவின் மகன் ஹம்சா பின்லேடன் சூளுரைத்துள்ளான். இது தொடர்பாக ஹம்சா ஒசாமா பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்கெய்டா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின் லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அப்போடாபாத் என்ற நகரில் அமெரிக்காவின் சிறப்புப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்நிலையில், தனது தந்தையை கொலை செய்ததற்காக அமெரிக்காவையும் அந்நாட்டு மக்களையும் பழிக்குப்பழி வாங்கப்போவதாக ஒசாமாவின் மகனான ஹம்ஸா பின் லேடன் எச்சரித்துள்ள வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேசியிருப்பது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஹம்ஸா என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவில், நாங்கள் எல்லோருமே ஒசாமாதான். பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், ஏமன், சோமாலியா, போன்ற நாடுகளில் அமெரிக்காவின் கட்டளைகளை ஏற்க மறுக்கும் மற்ற முஸ்லிம் நாடுகள் மீது அவர்கள் செலுத்திவரும் அடக்குமுறைக்காக அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் உள்ள அமெரிக்கர்கள் மீதும் தாக்குதல் நடத்தி ஒரு பேரழிவை உண்டாக்குவோம் என்று கூறியிருக்கிறார்.

மேலும், இது ஒசாமா என்ற ஒரு தனிமனிதருக்காக நடத்தப்படும் தாக்குதல் அல்ல, மாறாக இஸ்லாமைப் பாதுகாக்க நினைத்து உயிர்நீத்த அனைவரின் சார்பிலும் பழிவாங்கும் நடவடிக்கையாகும் என்று கூறியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நடந்த 9/11 தீவிரவாத தக்குதலின் போது ஹம்சா அவனுடைய தந்தை ஒசாமாவுடன் இருந்தான் என்றும் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த ஒசாமாவை பிடிக்க அமெரிக்க கம்மாண்டோஸ் முயன்ற போது அவனும் அங்கு இருந்தான் என்றும் தகவல்கள் வெளியானது.

அவனுடைய தந்தைக்கு பிறகு அல்கெய்டா அமைப்புக்கு அவன் ஒரு புதுமுகம் என்றும் தற்போது ஒரு ஆபத்தான விரோதி என்றும் அமெரிக்க தன்னுடைய பாதுகாப்புத் துறையை இன்னும் பெரிய அளவில் கொண்டு வர வேண்டும். மேலும், மிகுந்த உஷாரான விழிப்புணர்வோடு இருக்கும் கட்டாய நிலையில் உள்ளது என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க