• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்க ஸ்டைலில் இந்தியன் போலீஸ்

July 19, 2016 தண்டோரா குழு

காவல்துறை ஆடை என்பது இந்தியாவைப் பொறுத்தவரை மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறாக உள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் அப்படி இல்லை. அனைத்துக் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரே நிறத்தில் தான் ஆடை இருக்கும்.

இந்தியாவிலும் மற்ற நாடுகளில் உள்ளது போல் ஒரே நிற ஆடையை அறிமுகப்படுத்த இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஒரு ஆய்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தோ திபத்தியன் எல்லை போலீஸ்(ITBP), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), எல்லை பாதுகாப்பு படை (BSF), மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையை (CISF) சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதிதாக அறிமுகப் படுத்தப்படவுள்ள ஆடையின் முதல் தோற்றத்தை அறிமுகப்படுத்தினர்.

அதில், பழுப்பு நிறத்தில் பேன்ட், க்ரீம் நிறத்தில் சட்டையும் கைப்பட்டையில் நீல நிறத்தில் இந்தியன் போலீஸ் என்ற வாசகமும் க்ரீம் நிற தொப்பியில் போலீஸ் என்ற வாசகத்துடன் ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உடை பார்ப்பதற்கு சற்று அமெரிக்க போலீசாரின் ஆடையைப் போன்ற சாயலில் இருக்கும்.

தற்போது காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை இந்திய காவல்துறையினர் அனைவருக்கும் ஒரே ஆடையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஒப்புதல் பெற எல்லா மாநில அரசிற்கும் கடிதம் அனுப்பியுள்ளது. மாநில அரசுகள் இதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இந்திய போலீஸ் அதிகாரிகள் அனைவர்க்கும் ஒரே நிறத்தில் ஆடை அறிமுகப்படுத்தப்படும்.

இந்திய காவல் துறையினர் உடை விஷயத்தில் அனைத்து மாநில அரசும் முதல் முறையாக ஒரு முடிவு எடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க