• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பணியின் பெயரல்ல, பணியாளரின் பண்பே முக்கியம்.

June 29, 2016 தண்டோரா குழு

பதவி வந்துவிட்டால் பணமும் அகம்பாவமும் கூட வந்து விடும். பதவியும் பணமும் இரட்டைப் பிறவி என்றே அறிந்த நமக்கு ஒரு ஆளுநரின் மனைவி குடும்பச் செலவைச் சமாளிக்க உணவகத்தில் சர்வராக வேலை செய்கிறார் என்ற செய்தி கேட்டால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும்.

அமெரிக்காவின் மைனெ மாகாணத்தின் ஆளுநர், பௌல் லீபெஜ். அவரது மனைவி ஆன் லீபெஜ் உடன் அகஸ்டாவில் வசித்து வருகிறார். சராசரியாக ஒரு கணவன், மனைவி மைனெ மாகாணத்தில் வாழ வருட வருமானம் 87,000 அமெரிக்க டாலர் தேவைப்படும்.

அருகிலுள்ள 50 மாநிலங்களின் ஆளுநர்களை விட மிகக்குறைந்த வருமானமே பெறும். லீபேஜ்ன் வருட வருமானம் 70,000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே.

இதற்கு முன்பு சட்டக் கல்லூரியில் படிக்கும் இவரது மகள் பூத் பே ஹார்பர் அருகிலிருக்கும் மக்சீகுல்ல்ச் உணவகத்தில் ஒரு மணி நேரத்திற்கு 28 அமெரிக்க டாலர் என வேலைபார்த்தார்.

மகளைப் பின்பற்றியே அவரது மொழிதலின்படி ஆன் லீபேஜ்ம் தன் குடும்பச் செலவை சமாளிக்கப் பணியில் அமர்ந்தார். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் சமயங்களில் கிடைக்கும் உபரி வருமானத்தை சேமித்துத் தான் ஒரு கார் வாங்கப் போவதாகக் கூறியுள்ளார்.

மெர்சிடிஸ் அல்லது ரேஞ்ச் ரோவரோ அல்ல. சாதாரண டொயோடா RAV4 தான் தங்கள் சக்திக்குள் அடங்கும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் 1987ம் ஆண்டுக்குப் பின் உயர்த்தப்படாத ஆளுநர்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்படும் என்ற ஒரு தீர்மானம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று அரசு
அமைப்பு தெரிவித்துள்ளது.

அதாவது பௌல் லீபெஜ்ன் சம்பளம் 1,50,000 அமெரிக்க டாலராக உயர்த்தப்படலாம் என்பது கணிப்பு.
மைனெ மாகாணத்தில் பருவ காலங்களையொட்டி உணவகங்களிலும். மதுபானக் கடைகளிலும், அதிக பணியாளர்களை அமர்த்துவார்கள். கிட்டத்தட்ட 10,000 பேர் வேலையில் அமர்வர்.

இதுவரையில் மாகாணத்தின் முதல் பெண்மணியாக இருந்து தனது கடமைகளை, இரண்டாவது வருமானமின்றிச் செய்து வந்ததாகக் கூறியுள்ளார். சில சமயங்களில் அது மிகவும் சிரமமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால் தற்போழுது தன்னால் குடும்ப பாரத்தை எளிதாக்க முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.

இது போன்ற சவாலான பணிகளையே தான் செய்ய விரும்புவதாகவும், தனது கடினமான உழைப்பினால் தனக்கென்று தனி அடையாளத்தை நிலைநாட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது உணவகப் பொதுமேலாளர் ஜாக்கி பர்னிகோட், ஆன் ஒரு அற்புதமான ஊழியர், தான் அவரது பெரிய ரசிகர் என்று கூறியுள்ளார். மேலும், உணவகத்திற்கு வருகை தரும் பொது மக்களிடத்தில் ஆன் தன்னைப் பற்றி எதுவும் தெரிவிக்காத போதும், அவரை அடையாளம் கண்ட சிலர் அவரது எளிமையையும், விடாமுயற்சியையும், சவாலை எதிர்கொள்ளும் திறமையையும் புகழ்ந்ததோடு, மாகாணத்தின் முதல் பெண்மணி தங்களுக்கு ஒரு வழிகாட்டி என்று பாராட்டு தெரிவித்தனர்.

மற்ற சில சொத்தும் சுகமும் உள்ள அரசியல்வாதிகள் வாக்களிக்கும் சாதாரணப் பிரஜைகளைப் பற்றி கண்டுகொள்வதுமில்லை, கவனம் செலுத்துவதுமில்லை என்று க்ரீன் என்ற பெண்மணி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க