• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்க கம்பெனியை தொழிலாளர்கள் வசமே ஒப்படைக்கும் வெனிசுலா.

July 20, 2016 தண்டோரா குழு

அமெரிக்க கிம்பர்லி கிளார்க் நிறுவனத்தின் தொழிற்சாலையை தானே ஏற்றுக் கொண்டுள்ள வெனிசுலா அரசு, அதை தொழிலாளர்கள் வசமே ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.

தென் அமெரிக்க நாட்டின் வடபகுதியில் உள்ள வெனிசுலா நாட்டின் அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவு வெனிசுலாவின் வருமான குறைவுக்கு காரணமாக உள்ளது.

இந்நிலையில் உற்பத்தி மற்றும் வினியோகத்தை மேம்படுத்துவது மற்றும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவது ஆகிய நடவடிக்கைகளுக்கான புதிய திட்டத்தை அந்நாடு உருவாக்கி உள்ளது.

இத்திட்டத்தின் ஒருபகுதியாக அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான கிம்பர்லி கிளார்க்கின் தொழிற்சாலையை அரசே எடுத்துக்கொண்டு விட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பல பொருட்களை உற்பத்தி செய்து வந்த இந்தத் தொழிற்சாலையை, அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் வசமே ஒப்படைக்கப்படவுள்ளது.

அதே போன்ற பல்வேறு தொழிற்சாலைகளை அரசே எடுத்துக்கொள்வது புதிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். உணவு மற்றும் மருந்துகளின் வினியோகத்தை முறைப்படுத்தி, பற்றாக்குறையிலிருந்து வெளியில் வருவதற்குத் தேவையான பணிகளை ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ முடுக்கி விட்டிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சிட்டிபேங்க் நிறுவனம் அந்நாட்டின் சர்வதேச நடவடிக்கைகளில் பெரிய உதவியைச் செய்துள்ளது என்றும், 30 நாட்களுக்குள் அந்நாட்டின் மத்திய வங்கி அதன் கணக்கு வழக்குகளை முடித்துக் கொடுக்கும் என்றும் கூறினார். மேலும், வெனிசுலாவில் உள்ள பொருளாதார யுத்தம், மற்றும் புதிய நீதி விசாரணையில் ஏகாதிபத்திய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டையும் இணைக்கும் ஒரு செயல்பாடு என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க