• Download mobile app
30 Apr 2026, ThursdayEdition - 3732
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா சமாதிக்கு நடிகர் அஜித்குமார் அஞ்சலி

December 7, 2016 தண்டோரா குழு

திங்கள்கிழமை மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகர் அஜீத் குமார் புதன்கிழமை அதிகாலையில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்களன்று (டிசம்பர் 5) தேதி இரவு 11.30 மணிக்கு காலமானார். செவ்வாயன்று மாலை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா இறந்த செய்தி கேட்டு பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜீத் சென்னைக்கு வர முடிவு செய்தார். ஆனால், அவருக்கு தொடர்ச்சியான விமான சேவை கிடைக்கவில்லை. அதனால், இரங்கல் செய்தியை அனுப்பினார்.

புதனன்று காலை 4.30 மணிக்கு சென்னை வந்த அஜித் நேராக மெரினா கடற்கரைக்குச் சென்றார். அங்கு ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்த இடத்தில் 10 நிமிடங்கள் அவருக்காக அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மனைவி ஷாலினி, ஷாலினியின் தம்பி ரிச்சர்டு, மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ் சந்திரா ஆகியோரும் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க