November 13, 2017
தண்டோரா குழு
ஏர் ஏசியா விமான நிறுவனம் உள்நாட்டில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.99 முதல் தொடங்கும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஏர் ஏசியா விமான நிறுவனம் தற்போது புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.அதன்படி ரூ.99 சலுகைக் கட்டணத்தில் (வரிகள் தவிர்த்து) உள்நாட்டு பயணத்தையும், ரூ.444 சலுகை கட்டணத்தில் (வரிகள் தவிர்த்து) வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ளலாம்.
ஏர் ஏசியா நிறுவனத்தின் இந்த ஆஃபர் குறிப்பிட்ட இடங்களுக்குள் பயணிக்க மட்டுமே செல்லும்படியாகும். அதன்படி, இந்தியாவுக்குள் பெங்களூர், கொச்சி, ஹைதரபாத், ராஞ்சி , புவனேஷ்வர், கொல்கத்தா, டெல்லி, கோவா, ஆகிய இடங்களுக்கு இந்த சிறப்பு சலுகை மூலம் பயணிக்கலாம்.
மேலும்,இந்த சலுகையை பெற இன்று இரவு முதல் 19ஆம் தேதி வரையில் மொபைல் ஆப் மற்றும் ஏர் ஏசியா இணையத்தில் முன்பதிவு செய்யலாம்.ஏர் ஏசியா இணையதளம் மற்றும் செயலியில் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.