• Download mobile app
17 Oct 2026, SaturdayEdition - 3902
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்

September 21, 2016 தண்டோரா குழு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் திருப்பூரை சேர்ந்த சரவணன் என்பவர் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கல்லூரியில் சேர்ந்து 10 நாட்களில் மருத்துவக் கல்லூரி விடுதியில் கடந்த ஜூலை 10ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கபட்டது.

நாடாளுமன்றம் வரை சென்ற இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில், சரவணனின் தந்தை கணேசன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அடுத்து, சரவணனின் பிரேத பரிசோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

பிரேத பரிசோதனை செய்த சுதிர் கே. குப்தா தலைமையிலான மருத்துவர் குழு, எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. சரவணன் உடலில் யாரோ விஷ ஊசியை செலுத்தியிருக்க வேண்டும் என்றும் மருத்துவம் தெரிந்தவலராலேயே இந்த ஊசியை செலுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க