• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குருகுலப் பள்ளி மாணவனின் ஒப்பற்ற சாதனை

August 1, 2016 தண்டோரா குழு

அகமதாபாத்திலுள்ள ஹேம்சந்திரசார்ய சான்ஸ்கிரிட் பத்ஷலா எனும் குருகுலப் பள்ளியில் பயிலும் துஷார் டலவட் என்னும் 14 வயது மாணவன் சர்வதேச அளவில் நடைபெற்ற கணித போட்டியில் வெற்றி பெற்றது, குருகுலவாசத்தின் புகழ் இன்னும் குன்றவில்லை என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தப் போட்டி இந்தோனேசியாவின் யொக்யகர்டாவில் ஜூலை24ம் தேதி அபாகஸ் லேனிங்க் ஆஃ ஹையர் அரித்மெடிக் இன்டெர்னேஷனல் (ALOHA) என்ற அமைப்பால் நடத்தப்பட்டது. 18 தேசத்தைச் சேர்ந்த 1,300 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

கடுமையான போட்டிகளையும் தாண்டி வென்ற துஷார் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் மனொஜ் டிவாரி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களிடம் தனது வேகமாகக் கணக்கிடும் திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் குஜராத்தில் நடைபெற்ற போட்டியில் 70 கேள்விகளுக்கான விடையை 3 நிமிடம் 30 நொடியில் அளித்து 5,300 போட்டியாளர்களைத் தோற்கடித்துள்ளார்.

இவரது சாதனை மொத்த நாட்டை மட்டுமின்றி, குருகுலவாசக் கல்வி முறையையும் பெருமைப்படுத்தியுள்ளது என்று RSS உடன் இணைந்த BSM (பாரதீய ஷிக்ஷன் மண்டல்) அமைப்பின் துணைச் செயலர் முகுல் கனிட்கர் தெரிவித்துள்ளார். மேலும் தொன்மை மிக்க வேத கணிதம் இம் மாணவனின் சாதனை மூலம் மீண்டும் உலகளவில் பிரகாசித்துள்ளது என்றும் கூறினார்.

குருகுலவாசக் கல்வியில் தற்போது வரை எந்தவிதமான பட்டச் சான்றிதழ்களும் வழங்கப்படுவதில்லை. சில வருடங்களுக்குப் பிறகு அவை அமுல் படுத்தப்படலாம். ஆனால் இங்குப் பயிலும் மாணவர்கள் தேசிய திறந்த வெளிப் பாடசாலைகளின் மூலம் தேர்வு எழுதி பட்டங்கள் பெறலாம் என்றும் தெளிவுபடுத்தினார்.

மேலும் படிக்க