• Download mobile app
18 Jan 2026, SundayEdition - 3630
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வரும் தேர்தலில் விஜயின் ஆதரவு யாருக்கு?

May 10, 2016 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் கில்லி, துப்பாக்கி, கத்தி, தெறி எனப் பல படங்களில் நடித்து தமிழகத்தில் ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் நடிகர் விஜய்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற குழப்பம் உள்ளது போல் விஜயை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வருவாரா என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அதற்கு ஏற்றார் போல் விஜயின் ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாகச் செயல்பட்டு வந்தது. இருப்பினும் விஜய் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் மேளனமாகவே இருந்து வந்தார்.

ஆனால், விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கம் சார்பில் சில கட்சிகளை ஆதரவு அளித்து வந்தனர். இதற்கு நீண்ட நாட்களாக விஜய் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அகில இந்திய இளைய தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதில் இந்த வருடம் விஜய் தேர்தலில் நடுநிலையாகச் செயல்படவுள்ளதாகவும், அதனால் ரசிகர்கள் எந்த ஒரு கட்சிக்கு வேண்டுமானாலும் தங்கள் ஆதரவைத் தரலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் கட்சி கொடியையோ, விஜய்யின் பெயரையோ எங்கும் பயன்படுத்தக் கூடாது எனத் திட்டவட்டமாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க