• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விஜய் மீது வழக்கு பதிவு – கேரள சுகாதாரத்துறை நடவடிக்கை

November 14, 2018 தண்டோரா குழு

நடிகர் விஜய் புகைப் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்ற சர்கார் பட பேனர் திருச்சூரில் உள்ள தியேட்டரில் வைத்து இருந்ததாக கூறி நடிகர் விஜய்க்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் சர்கார்.இப்படம் வெளியாகும் முன்னே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது அதில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றது. இந்த போஸ்டருக்கு தமிழக அரசின் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்ததால்,இந்த புகைப்படம் புகையிலை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் எனவே உடனடியாக அந்த போஸ்டரை அகற்ற வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது.இதனால் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்ற சர்கார் பட போஸ்டர் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில்,தற்போது மீண்டும் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் சர்கார் பட போஸ்டர் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது.இந்தமுறை தமிழகத்தில் இல்லை. கேரளாவில் ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள திரையரங்கம் ஒன்றில்,விஜய் புகைப்பிடிக்கும் படத்தைக் கொண்டு பேனர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள சுகாதாரத் துறை,நடிகர் விஜய்,படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கேரள விநியோகஸ்தர்,தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும் படிக்க