October 13, 2017
தண்டோரா குழு
நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சந்தானத்துக்கும் கட்டிடங்களை கட்டி விற்பனை செய்யும் பில்டர் சண்முகசுந்தரம் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தகராறு ஏற்பட்டுள்ளது.இப்பிரச்னையில்
இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கி கொண்டதாகவும் மோதலில் அவர்கள் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.அப்போது சந்தானம், பா.ஜ.க தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்தை தாக்கியதாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக சந்தானம் மீது வளசரவாக்கம் போலீஸார் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, முன் ஜாமீன் கோரி சந்தானம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வந்தது.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினார்.மேலும்,வளசரவாக்கம் காவல்நிலையத்தில் 2 வாரம் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.