• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து நடிகர் பொன்வண்ணன் விலகல்

December 11, 2017 தண்டோரா குழு

நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. அப்போது,துணைத் தலைவராக நடிகர் பொன்வண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் சங்க துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நடிகர் பொன்வண்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

பொன்வண்ணன் ராஜினாமா கடிதம் நடிகர் சங்கத்தால் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நடிகர் சங்க செயற்குழுவில் பொன்வண்ணன் ராஜினாமா குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

விஷால் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார் சினிமா வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்க பொறுப்பில் இருந்து அடுத்தடுத்த நிர்வாகிகள் விலகலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க