November 6, 2017
தண்டோரா குழு
சமூக பிரச்னை அரசியல் பிரவேசம் என அடுத்தடுத்து டுவிட்டரில் கலக்கி வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.
எனினும், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுற்றதைத் தொடர்ந்து,’விஸ்வரூபம் 2′ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன்.இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, தற்போது கிராபிக்ஸ், பின்னணி இசைக் கோர்ப்பு உள்ளிட்ட பணிகளே தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரெய்லர், கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.