• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடிபோதையில் கார் ஓட்டிய நடிகை காயத்ரி ரகுராம்

November 26, 2018 தண்டோரா குழு

குடிபோதையில் கார் ஓட்டிய நடிகை காயத்ரி ரகுராமுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.காயத்ரி ரகுராம் கடந்த 2002-ம் ஆண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் என்பவரின் மகளாவார்.காயத்ரி ரகுராம் திரைப்பட நடிகை மட்டுமின்றி நடன பயிற்றுனரும் ஆவார்.

கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவர் மேலும் பிரபலமடைந்தார்.தற்போது அவர் தொலைகாட்சி நிகழ்சிகளிலும் பணியாற்றி வருகின்றார்.இந்நிலையில், சென்னை திரு.வி.க.பாலம் பகுதியில் அபிராமபுரம் போலீசார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்றை நிறுத்தியுள்ளனர்.அந்த காரில் இருந்த நடிகை காயத்ரி ரகுராம் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது.

இது பற்றி கேட்ட போது போலீசாருடன் வாக்குவாதம் செய்த அவர்,பின்னர் மது குடித்ததை ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ3500 அபராதம் விதித்தனர்.தொடர்ந்து நடிகை காயத்ரியை கார் ஓட்ட அனுமதிக்காத போலீசார்,போக்குவரத்து காவலரை டிரைவராக வாகனத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க