• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுகவிற்கு ஆதரவா ? கோபத்தில் கவுண்டமணி

December 11, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே நகரில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையில்,
நடிகர் செந்தில், தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார் என்றும் அதற்கு எதிராக , ஆர்.கே.நகர் தொகுதியில் , அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, நடிகர் கவுண்டமணி, பிரசாரம் மேற்கொள்கிறார் என செய்தி வெளியானது.

இது குறித்து நடிகர் கவுண்டமணி கூறும்போது,

இன்று ஒரு காலை நாளிதழில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. அந்த செய்தி உண்மையல்ல.நான் எந்த கட்சியையும் சாராதவன். அரசியலிலும் இல்லாதவன். நான் எந்த கட்சியையும் ஆதரித்து பிரசாரம் செய்ய வில்லை. என்னை கேட்காமல் அவதூறாக செய்தி வெளியிட்டால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கவுண்டமணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க