• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவர்ச்சியான குற்றவாளிக்கு வித்தியாசமான தீர்ப்பு.

June 3, 2016 தண்டோரா குழு

கனடாவின் கியூபெக் பகுதியைப் பிறப்பிடமாக கொண்ட பெண் குற்றவாளிக்கு அங்குள்ள நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஸ்டேப்ஹனி பௌடோயன் (24), கனடாவின் நாட்டின் கியூபெக்கில் பிறந்த அவர் சிறு வயதிலேயே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு இளம் வயது திருடர்களை கொண்டு அந்தப் பகுதியில் இருந்த வீடுகளுக்குள் புகுந்த அங்கிருந்த பணம் மற்றும் ஆடம்பரமான பொருள்களை திருடிச் சென்றுவிட்டார்.

இதைக் கண்டுபிடித்த கனேடிய போலிசார் இவரைக் கைது செய்தனர். இதையடுத்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில் பல்வேறு கொள்ளையடித்த பொருட்களும் ஒரு காரும் கைப்பற்றப்பட்டது. பின்னர் பௌடோயனிடம் நடத்திய விசாரணையில் அவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தி வெளியிட்ட உள்ளூர் பத்திரிக்கைகள் அவரது பேஷ்புக் பக்கத்தில் அவர் போட்டிருந்த மிகவும் கவர்ச்சியான படத்தை எடுத்து பிரசுரம் செய்தனர். இதைப் பார்த்த ஒரு மாடலிங் நிறுவனம் இவரை விளம்பர மாடலாக தேர்வு செய்தது. பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் கவர்ச்சிகரமான மாடலாக மாறினார்.

அவரது புகழ் நாடு முழுவதும் பரவத் துவங்கியது. இந்நிலையில் நீதிமன்றத்தில் தான் செய்த தவறை ஒத்துக்கொண்டதோடு, அது அறியாத வயதில் செய்தது எனவும் அதற்காக மன்னிப்பு கேட்பதோடு, எந்தத் தண்டனையையும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது வழக்கறிஞரின் வேண்டுகோளை ஏற்று நீதிமன்றம் ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியது. அதில் இந்தக் குற்றம் சிறுவயது குற்றம் என்பதாலும், தற்போது தனக்கென ஒரு கண்ணியமான வாழ்க்கையை அமைத்துக்கொண்டதாலும் அவரது வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று அவருக்கு 90

நாட்கள் சிறை தண்டனை வழங்குவதோடு, அதை அவர் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய வழக்கறிஞர், குற்றத்திற்குத் தண்டனை உறுதி என்பதால் நீதிபதியிடம் விளம்பர படத்தில் நடிக்கத் தடையில்லாமல் தண்டனைத் தருமாறு கேட்டுக்கொண்டோம் அதற்கு அவர் இப்படித் தீர்ப்பு வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும் ஸ்டேப்ஹனி பௌடோயனிடம் கூறும்போது, வார விடுமுறையைப் புத்தகத்துடன் சிறையில் கழிப்பது ஒரு கடினமான செயலாக இருக்காது எனத் தெரிவித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

இதனால் இந்தத் தீர்ப்பு தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் படிக்க