• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்ற விமான நிலையங்களில் சிறப்பு மையம் – விமான நிலைய ஆணையம்

November 18, 2016 தண்டோரா குழு

விமான நிலைய நுழைவாயில்களில் வங்கிகள் சிறப்பு மையங்களை அமைத்து விமானப் பயணிகளுக்கு ரூபாய் நோட்டுக்கள் மாற்றிக் கொடுக்க விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து விமான நிலைய ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சிரமத்தைப் போக்க விமானப் பயணிகள் பயன்பெறும் வகையில் இந்த சிறப்பு மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவதற்கான இந்த வங்கி சிறப்பு மையங்கள் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணிகள் ரூபாய் நோட்டுக்கள் மாற்றி பயன்பெறும் வகையில் நாட்டுடமையாக்கப்பட்ட எந்த ஒரு வங்கியும் தங்களது சிறப்பு மையங்களை தற்காலிகமாக அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும்.

கூட்டாண்மை நிறுவன அடிப்படையில் செயல்படும் விமான நிலையங்களில் இந்த சிறப்பு மையங்களை அமைக்க இயலாது. அங்கு ஏற்கனவே போதிய வங்கிக் கிளைகள் உள்ளதால் சிறப்பு மையங்கள் அமைக்க அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலையங்களில் வாகன நிறுத்தக் கட்டணம் வருகிற 21-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க