• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் 96 வயதில் 98 மார்க் எடுத்த பாட்டி…!

November 1, 2018 தண்டோரா குழு

கேரளா மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தின் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 96 வயதுடைய மூதாட்டி 98/100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

கேரளா மாநிலத்தில் பல இடங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வு நடைபெற்றது.இதில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல்,எழுதுதல்,கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற இறுதித் தேர்வை எழுதியவர்களில் 42 ஆயிரத்து 933 பேர் வெற்றி பெற்றனர்.

இந்த தேர்வு எழுதியவர்களில் கேரளா ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மாள்(96) தான் மிக வயதான மாணவி.இத்தேர்வு முடிவுகள் நேற்று புதன் கிழமை வெளியிடப்பட்டன.அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தேர்வில் கார்த்தியாயினிஅம்மாள் 98 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்று அதிர்ச்சியை தந்துள்ளார்.இந்த பாட்டி எழுத்தில் 40 க்கு 38 மதிப்பெண்களையும்,மற்ற தேர்வுகளில் முழு மதிப்பெண்ணை பெற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள விழாவில்,கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,கார்த்தியாயினி பாட்டிக்கு தகுதிச் சான்றிதழ் வழங்க உள்ளார்.கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக கடந்த 6 மாதத்துக்கு முன்,அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் கார்த்தியானி அம்மாள் சேர்ந்துள்ளார். சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை கார்த்தியானி அம்மாள் நிரூபித்துள்ளார்.இதையடுத்து,கார்த்தியானி அம்மாள் பாட்டிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க