August 3, 2016
தண்டோரா குழு
திருப்பூர் தரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். பழைய துணிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று ஆடி அம்மாவாசை என்பதால் வெளியூர் கோவிலுக்கு சென்று விட்டு இரவு திரும்பி வந்து வீட்டைப் பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுத் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் ரூரல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய விசாரணையில் வீட்டில் இருந்த 110 சவரன் நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் துப்பு துலக்கி வருகின்றனர்.