• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

89 எம்எல்ஏக்கள் கொண்ட திமுகவால் செய்யமுடியாததை ஒரு எம்எல்ஏகூட இல்லாத பாமகவால் செய்யமுடியும் – அன்புமணி

February 23, 2019 தண்டோரா குழு

பாமக எந்த கொள்கையையும் விட்டு கொடுக்காமல் 10 அம்ச கோரிக்கையோடு தான் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. 89 எம்எல்ஏக்களை கொண்டுள்ள திமுகவால் செய்யமுடியாததை ஒரு எம்எல்ஏகூட இல்லாத பாமகவால் செய்யமுடியும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பாமக சிறப்பு பொதுக்கூழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட உரையாற்றிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ” தேர்தல் கூட்டணி முடிவை சிலர் விமர்சிக்கிறார்கள். கட்சியின் வயதில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து பாமக உள்ளது. நம் கட்சியின் நோக்கம் தமிழகம் முன்னேற வேண்டும். ஆட்சிக்கு வந்தால் தான் நம் இலக்கை எட்டமுடியும். புகையிலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தோம். ஆனால், பதவிக்கு வந்தவுடன் பொது இடங்களில் புகை பிடிக்ககூடாது என்று ஆணையிட்டோம். தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம்.

தனித்து போட்டி என்று அறிவித்து கடந்த காலங்களில் போட்டியிட்டோம். மக்கள் நமக்கு கொடுத்தது 6 சதவீத வாக்குகள் தான். நம் இலக்குகளை அடைய சூழலுக்கேற்ப வியூகங்களை அமைக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் ராமதாஸ் இந்த முடிவு எடுத்துள்ளனர். ஜூலை மாதம் உள்ளாட்சி தேர்தலில் நாம் அதிக இடங்களை பெறுவோம். அறிவிப்பு மட்டுமே செய்ய வேண்டும். நேற்று தைலாபுரத்தில் முதல்வரும், துணை முதல்வரும் ராமதாஸிடம் ஆசி பெற்றார்கள். இது நமக்கு கிடைத்த மரியாதை. பாமக எந்த கொள்கையையும் விட்டு கொடுக்காமல் 10 அம்ச கோரிக்கையோடு தான் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுகவுடன் இணைந்து இக்கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்தால் எளிதில் நம் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும். சத்திரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பது முக்கியம்.

89 எம்எல்ஏக்களை கொண்டுள்ள திமுகவால் செய்யமுடியாததை ஒரு எம்எல்ஏகூட இல்லாத பாமகவால் செய்யமுடியும். இக்கூட்டணி அமைக்கப்பட்டதால் பாமக தன் கொள்கையிலிருந்து எள்ளளவும் பின்வாங்கவில்லை என பேசினார்.

மேலும் படிக்க