• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செல்போனால் பறிபோன மாணவியின் உயிர்

September 11, 2020 தண்டோரா குழு

கோவையில் செல்போனை அதிகம் பயன்படுத்துவதாக பெற்றோர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவி சானி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அன்னூர் வடக்கலூர் பகுதியை சேர்ந்தவர் குமார். (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவரது மகள் ராகினி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அன்னூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில்,இவர் செல்போனில் அதிக நேரத்தை செலவழித்ததால் மாணவியின் தந்தை அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், விரத்தியடைந்த பள்ளி மாணவி நேற்று மாலை சானி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.வீட்டில், மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை கண்ட அவரின் பெற்றோர் சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில்,சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.அலைபேசியை பயன்படுத்துவதை பெற்றோர்கள் கண்டித்ததால், மனமுடைந்து மாணவி சானி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க