• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களைக் கண்டித்து கோவையில் பாஜக ஆர்ப்பாட்டம்

July 16, 2020 தண்டோரா குழு

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களைக் கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள பா.ஜ.க.வினர் அவரவர் வீடுகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் அவரவர் வீடுகளில் அற வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த கோரி தமிழக பா.ஜ.க.தலைவர் முருகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும்,
முருக பக்தர்களை அவமானப்படுத்தும் நோக்கில் சுரேந்திர நடராஜன் போன்ற கும்பல்கள் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். சுரேந்திர நடராஜன் போன்ற கபடதாரிகளை கண்டித்தும், இவரை தேசத் துரோக வழக்கு மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கோவையில், அவரவர் வீடுகளுக்கு முன்பாக அற வழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் தனது வீட்டில் வைத்து அற வழி ஆர்ப்பாட்டம் செய்தார்.இதே போல மாவட்ட செயலாளர் கவிதா ராஜன் இராமநாதபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அறவழி கண்டனப் போராட்டம் நடத்தினார்.இதே போல கோவையில் உள்ள பாஜ.கவினர் பல்வேறு இடங்களில் அவரவர் வீடுகளில் அறவழி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் படிக்க