• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போபாலில் தப்பிச் சென்ற 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

October 31, 2016 தண்டோரா குழு

போபால் சிறையிலிருந்து திங்கள்கிழமை (அக். 31) அதிகாலையில் தப்பியோடிய “சிமி” தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 8 தீவிரவாதிகள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபால் மத்திய சிறையில் சிமி இயக்கத்தை சார்ந்த 8 தீவிரவாதிகள் அதிகாலையில் சிறைக் காவலரின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தி சுவர் மீது ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து, தப்பியோடிய தீவிரவாதிகளைப் பிடிக்க தேடல் வேட்டை நடைபெற்றது.

இதையடுத்து, போபால் புறநகர் பகுதியான இந்த்கேடி என்னும் கிராமத்தில் தப்பிச் சென்ற தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த காவல்துறையினர் பதுங்கியிருந்த 8 சிமி தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் சென்னை குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட ஜாகீர்உசேன், மெகபூப் ஆகியோரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க