January 30, 2018
தண்டோரா குழு
டெல்லியில் 8 மாத பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது உறவுக்கார காமுகனை போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் சுபாஷ் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதிகளுக்கு 8 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் வேலைக்கு செல்லும் நேரத்தில் தங்கள் குழந்தைகளை உறவினரிடம் விட்டு செல்வது வழக்கம். அதைபோல் சம்பவத்தன்றும் தனது அண்ணியிடம் 8 மாத குழந்தை உட்பட 2 பெண் குழந்தைகளை அத்தம்பதியினர் விட்டுவிட்டு சென்றுள்ளார்.
இதற்கிடையில், மதிய வேளையில் அண்ணியின் 28 வயது மகன்,8 மாத பச்சிளம் குழந்தையை கொஞ்சுவதாக கூறி தூக்கிச் சென்றுள்ளான்.மாலையில், குழந்தையின் தாய் வேலையில் இருந்து திரும்பி குழந்தையை பார்த்தபோது, அதன் பிறப்புறுப்பில் இருந்து அதிகப்படியாக ரத்தம் வடிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உறவினர்கள் உதவியோடு குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்கு கூட்டிச் சென்றார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோத்துவிட்டு அதிகப்படியாக ரத்தம் வெளியேறியது மற்றும் வலியால் குழந்தை மோசமான நிலைக்கு சென்றுவிட்டதாக கூறி ஐசியூவில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதையடுத்து சுமார் 3 மணி நேரம் அந்த பச்சிளம் குழந்தைக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது குழந்தை ஓரளவுக்கு தேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, தகவல் அறிந்ததும் குழந்தைகள் நல ஆர்வலர்கள், மற்றும் பிரமுகர்கள் மருத்துவமனைக்கு விரைந்து, குழந்தைக்கு உரிய சிகிச்சையளிக்க தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.
இதனையடுத்து, இது குறித்து போலீஸ் அதிகாரிகள் அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, குடிபோதையில், குழந்தையை சிதைத்ததாக ஒப்புக்கொண்டான். இதையடுத்து அவனை போலீசார் கைது செய்து பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், 8 மாத பச்சிளம் குழந்தைக்கு உறவினரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.