• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க எதிர்ப்பு – கோவையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

May 19, 2020 தண்டோரா குழு

எட்டு மணி நேர வேலை நேரத்தை பன்னிரண்டு மணி நேரமாக அதிகரிக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எட்டு மணி நேர வேலை நேரத்தை பனிரெண்டு மணி நேரமாக அதிகரிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது முக கவசம் அணிந்தபடி, மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

மேலும்,எட்டு மணி நேர வேலை நேரத்தை அதிகரிக்க கூடாது எனவும், வேலை நேரத்தை பனிரெண்டு மணி நேரமாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்திய தொழிற்சங்கத்தினர், வருகின்ற 22 ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்தனர்.

மேலும் படிக்க