• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

8 அடி நீளமுள்ள மலைப்பாம்புக்கு சிடி ஸ்கேன் எடுத்த மருத்துவர்கள்

September 26, 2017 தண்டோரா குழு

ஓடிஸாவில் அடிபட்ட எட்டு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றுக்கு தனியார் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் செய்யப்பட்டது.

ஓடிஸா மாநிலத்திலுள்ள கியோன்ஜார் மாவட்டத்தின் அனந்தபூர் நகரம் புவனேஸ்வரிலிருந்து சுமார் 13௦ கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. அங்கு அடிபட்ட எட்டு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை வனத்துறை அதிகாரிகள் மீட்டு, ஓடிசாவின் Snake Helpline அமைப்பின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிறகு, அதை ஆனந்த்பூர் வனத்துறை அதிகாரி ஒருவர், ஓடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் கால்நடை அறிவியல் கல்லூரிக்கு எடுத்து வந்தார். முதலில் அந்த பாம்பிற்கு எந்த விதமான காயம் ஏற்பட்டுள்ளது என்று கண்டறிய அதற்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. ஆனால், அதன் காயங்கள் சரியாக தெரியவில்லை.

இதையடுத்து, அதன் காயங்களை தெளிவாக அறிந்துக்கொள்ள, கால்நடை மருத்துவர்கள் அதற்கு சிடி ஸ்கேன் செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில் அவ்வளவு பெரிய பாம்பை அசையவிடாமல் ஒரே இடத்தில் எப்படி பிடித்து வைப்பது? என்று யோசித்தனர்.

இந்த சிக்கலை சமாளிக்க பாம்பின் உடலில் மருத்துவ டேப்பை பயன்படுத்தி அதன் உடலில் ஒட்டினர். அதன் பிறகு, அதற்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதன் உடல் முழுவதிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருப்பதை அந்த ஸ்கேன் மூலம் தெரிய வந்தது. இதை குறித்து சர்வதேச கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையை பெற்ற பிறகு, அந்த பாம்பிற்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க