• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

72 வது வயதில் பட்டம் பெற்ற அமேரிக்கா மூதாட்டி

May 9, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது 72 வது வயதில் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார். ஞாயிற்றுக்கிழமை(மே 7) நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு பட்டம் அளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் தெனெஸ்ஸே மாகணத்தின் உள்ள நாஷ்வில்லே என்னும் நகரில் டார்லேனே முல்லின்ஸ் என்னும் 72 வயது மூதாட்டி வசித்து வருகிறார்.

1962-ம் ஆண்டு டெண்நேச்சே மாகாணத்து பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த இவர் ஓட்டப்பந்தய விராங்கனையும் கூட. அதே பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஜான் முல்லின்ஸ் என்பவரை சந்தித்துள்ளார். அவர்களுடைய நட்பு காதலாக வளர்ந்து, திருமணத்தில் முடிந்தது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.

குடும்பத்தை கவனித்து வந்த டார்லேனே படிப்பை தொடர முடியாமல் போய்விட்டது. எனினும் அவர் மனதில் படித்து பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. 1984-ம் ஆண்டு அவருடைய கணவர் ஜான் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2௦13-ம் ஆண்டு டார்லேனே தான் படித்த பல்கலைக்கழகத்திற்கு சென்று மீண்டும் படிப்பில் சேர்ந்தார். அதில் அவர் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார்.

டெண்நேச்சே மாகாணத்து பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு பட்டம் கொடுக்கப்பட்டது.

“பட்டம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியுள்ளது” என்று டார்லேனே முல்லின்ஸ் தெரிவித்தார்.

மேலும் படிக்க