ஜப்பானில் குறும்பு செய்ததற்காகப் பெற்றோரால் அடர்ந்த காட்டில் தனித்து விடப்பட்ட 7 வயது சிறுவன் ஒரு வாரத்துக்குப் பிறகு ராணுவத்தினரால் உயிருடன் மீட்கப்பட்டார்.
குழந்தைகள் குறும்பு செய்தால் பெற்றோர்கள் கண்டிப்பது வழக்கம். ஆனால், ஜப்பான் நாட்டில் குழந்தை குறும்பு செய்தார் என்பதற்காக அவனது பெற்றோர் அவனைத் தனிமையாக காட்டில் விட்டுள்ளனர்.
ஜப்பானின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுவன் யமாட்டோ டநாகா. அவர் வீட்டில் அதிக அளவில் குறும்பு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவனது பெற்றோர் அவனை அடர்ந்த காட்டில் தனியாக விட்டு விட்டு வந்துவிட்டனர். எப்படியும் சிறிது நேரத்தில் டநாகாவைக் கண்டுபிடித்து விடலாம் என்று பெற்றோர்கள் நினைத்தனர் ஆனால் அது நடக்காமல் போனது.
இதையடுத்து போலீசில் பெற்றோர் புகார் அளிக்க, ராணுவத்தின் உதவியுடன் அந்த கரடிகள் நிறைந்த அடர்ந்த வனப் பகுதியில் 7 நாட்களுக்காகச் சிறுவனை தேடிவந்தனர். இந்த நிலையில், அந்த வனப்பகுதியில் உள்ள ராணுவ மையத்துக்கு அருகில் ஒரு இடத்தில் அந்தச் சிறுவனை கண்டுபிடித்தனர் மீட்புக் குழுவினர். கடும் குளிரும், கன மழையும் பொழியும் அந்த அடர்ந்த வனப் பகுதியில் 7 நாட்கள் சிறுவன் தாக்குப்பிடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் யமாட்டோ டநாகா.
மேலும், எனது மகனைக் காப்பாற்றியதற்காக மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்த சிறுவனின் தந்தை, நடந்த தவற்றுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்துக்கொண்டார்.
இதில் மேலும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு என்ன வென்றால் அந்தச் சிறுவனை கண்டுபிடித்த ராணுவத்தினர் அவனைப் பெற்றோரிடம் காண்பிக்கும்போது முதன்முதலில் அவன் அம்மா பசிக்கிறது எனக் கேட்டுள்ளான். இதையடுத்து அங்கு நின்றிருந்தவர்கள் அனைவரும் கண்கலங்கியுள்ளனர்.
அப்படி இருக்கும் பொது பெற்றவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பது தற்போது நெகிழ்ச்சியான விசயமாகப் பேசப்பட்டு வருகிறது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்