June 16, 2020
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் 7 வயது சிறுவனின் கழுத்தில் குத்திய தொட்டில் கொக்கியை அகற்றிய டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
திருப்பூர் பாரதிபுரம் பகுதி சேர்ந்த சிவராஜ். இவருடைய மகன் ரிதிக் ஈஸ்வரன். இச்சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் சிறுவன் வீடு அருகே உள்ள ஒரு மரத்தில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். நேற்றுமுன்தினம் சிறுவன் மரத்தில் ஏறி தொட்டி கட்டும் போது எதிர்பாராதவிதமாக மரக்கிளை ஒடிந்து கீழே விழுந்தன. அப்போது கீழே விழுந்த தொட்டி கட்டும் கொக்கி கம்பி அவளது கழுத்து பகுதியில் குத்தி வலது காது வழியாக வெளியே வந்தது. இதனால் இரத்தம் வெளியேறிய சிறுவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சிறுவனை கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வந்தனர்.
அங்கு சிறுவனை குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவில் டாக்டர் அனைத்து சிடி ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்தனர். அதில் சிறுவனின் கழுத்து பகுதியில் குத்திய கம்பியானது 12 மில்லி மீட்டர் அகலமும் 2 அடி நீளமும் உள்ள குப்பி கம்பி என்பது தெரியவந்தது. இதையடுத்து,சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் அறிவுறுத்தலின்படி குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை டாக்டர் ரங்கராஜன் தலைமையில் டாக்டர்கள் தர்மேந்திரா முத்துராமலிங்கம், செந்தில்குமார், சீனிவாசன் மற்றும் மயக்கவியல் துறை தலைவர் ஜெய்சங்கர் நாராயணன் வசந்தி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.இதில் வெற்றிகரமாக சிறுவனின் கழுத்து பகுதியில் சிக்கியிருந்த கொக்கி கம்பி அகற்றி சாதனை படைத்தனர் தற்போது அந்த சிறுவன் உடல் நிலை தேறி நல்ல நிலையில் உள்ளான் சாதனை படைத்த டாக்டர் குழுவினர் காளிதாஸ் பாராட்டினார்.