• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சவுகரியம் போல பேசுகின்றனர் – கமல்ஹாசன்

May 10, 2019 தண்டோரா குழு

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சவுகரியம் போல பேசுகின்றனர் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மக்கள் நீதி மய்யத்திற்கு மிகப்பெரிய சந்தோசத்தை தந்துள்ளது. பல்லடம் பகுதியில் மக்கள் நீதி மய்ய நிர்வாகி பாலமுருகன் உயிரிழந்த விவகாரத்தில் கமல்ஹாசன் பரப்புரை செய்ய தடை விதிக்க வேண்டும் என அவரது மனைவி விஜயகுமாரி புகாரளித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, கணவனை இழந்த மனைவியின் குரல் அல்ல. யாரோ ஒருவரின் தூண்டுதலால் பேசுகிறார். மக்கள் நீதி மய்யத்தினர் யாரும் அவரது குடும்பத்தை பார்க்க செல்லவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு, இடைத்தரகர்கள் புகுந்து தங்களிடம் காசு கேட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு எனது உறவினர் மரணத்திற்கு கூட என்னால் செல்ல முடியவில்லை.அப்படியிருக்கையில் எல்லோரது மரணத்திற்கும் நான் செல்லவில்லை என குற்றச்சாட்டு கூறுவது ஏற்புடையதல்ல. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சவுகரியம் போல பேசுகின்றனர். இவ்விவகாரத்தில் கவர்னர் முடிவெடுக்க வேண்டும். தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்ற திமுக வினரின் தொடர் பேச்சுகள் குறித்த கேள்விக்கு திமுகவினர் தங்களுக்கு வாழ்த்து சொல்வதாக அக்கருத்தை கருகிறேன் எனக் கூறினார்.

மேலும் படிக்க