• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

7 பேர் விடுதலை எப்போதும் சாத்தியமில்லை, அது நடக்காது” – சு.சாமி

March 21, 2019 தண்டோரா குழு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை சாத்தியமில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பரமணியன் சுவாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பரமணியன் சுவாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் தனித்து போட்டியிடாததால் பாஜகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதில்லை . கூட்டணி இல்லாமல் இருந்தால் நான் பா.ஜ.கவுக்கு பிரசாரம் செய்திருப்பேன், கூட்டணியில் என்ன பேச முடியும்? ராஜீவ் காந்தி கொளையாளிகளை எல்லாம் விடுவிக்க வேண்டும் என்று, கூட்டணி கட்சிகள் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

அப்போது, தேர்தல் அறிக்கைகளில் 7 பேர் விடுதலை செய்ய வலியுருத்தப்படும் என்று அதிமுக, திமுக கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டிருப்பதை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு,தேர்தல் அறிக்கையை குப்பையில்தான் வீச வேண்டும்.ராஜீவ் கொலையாளிகளை எப்போதும் விடமாட்டோம், அது சாத்தியமில்லை தமிழிசை சவுந்திரராஜன் மாநில தலைவர்தான், அவருக்கு டெல்லி கொள்கை பற்றி தெரியாது என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க