• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் ரூபாய் 2,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

March 4, 2019 தண்டோரா குழு

வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண்.110-இன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் 11ம் தேதி ஒரு அறிவிப்புபை வெளியிட்டார் அதில் “தமிழக அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. பல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழக அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர். இதற்கென, 1,200 கோடி ரூபாய் 2018-19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் மாவட்டத்திற்கு ஒருவா் வீதம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவிக்கான வங்கி சான்றிதழை வழங்கி இத்திட்டத்தைத் முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புகளின் அடிப்படையில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நிதி தொடா்ந்து செலுத்தப்படும். குடும்ப தலைவியின் வங்கி கணக்கிலேயே இந்த சிறப்பு நிதி செலுத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் படிக்க