• Download mobile app
26 Oct 2025, SundayEdition - 3546
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

6 வயது சிறுமியை கொடூரமாக அடித்த பெண் கைது

June 6, 2017 தண்டோரா குழு

6 வயது சிறுமியை கொடூரமாக அடித்த பெண்ணை மலேசியா போலீசார் கைது செய்தனர்.

6 வயது சிறுமி உணவை சரிவர சாப்பிடாமால் கீழே சாப்பாட்டை சிந்தியதால் அச்சிறுமியை பெண் ஒருவர் கொடூரமாக அடித்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குழந்தையை ஏன் இப்படி அடிக்கிறீர்கள் என்று அக்கம் பக்கத்தினர் கேட்டதற்கு பலமாக அடிக்கவே கண்டித்தேன் அவ்வளவு தான் என்று அந்தப் பெண் கூறியுள்ளார். மேலும் தான் அந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாகவும் பெண் கூறியுள்ளார்.

எனினும், பார்ப்போரை நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் தீயாக பரவியதால், அந்தப் பெண்ணின் விலாசத்தை கண்டுபிடித்து நள்ளிரவே மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், அப்பெண் தமிழில் குழந்தையை தான் திட்டுகிறார், எனவே அவர் தமிழகத்தில் இருந்து அங்கு சென்று பணியாற்றுபவரா அல்லது அங்கேயே வசித்து வருகிறாரா என்ற விவரங்கள் தெரியவில்லை.

மேலும் படிக்க