• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

6 மாதங்களில் 20 கோடி ரூபாய் மதிப்பில் சமூக நலத்திட்டங்களை பன்னாட்டு அரிமா சங்கங்கள் செய்துள்ளது

December 25, 2020 தண்டோரா குழு

கடந்த ஆறு மாதங்களில் சுமார் இருபது கோடி ரூபாய் மதிப்பிலான சமூக நலத்திட்டங்களை பன்னாட்டு அரிமா சங்கங்கள் செய்துள்ளதாக கோவையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மாவட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கோயமுத்தூர் மாவட்ட. ஒருங்கிணைந்த அரிமா 324 B 1 சார்பாக சரித்திரம் படைத்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள லிண்டாஸ் மகாலில் நடைபெற்றது.

மாவட்ட ஆளுநர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினர்களாக பன்னாட்டு இயக்குனர் சம்பத் மற்றும் முன்னால் பன்னாட்டு இயக்குனர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் ஒருங்கிணைப்பாளர் மதனகோபால் , முதல் துணை ஆளுநர் நடராஜன், இரண்டாம் துணை ஆளுநர் ராம் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கோவை, திருப்பூர் பொள்ளாச்சி, உடுமலை, நீலகிரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தருப்பூர் மத்தியம்,கோயமுத்தூர்,நேரு நகர் பொள்ளாச்சி,உடுமலைபேட்டை கிழக்கு,குறிச்சி இண்டஸ்ட்ரியில் எஸ்டேட்,சூலூர் மத்தியம், உதகமண்டலம்,நீல்கிரீஸ்,கோத்தகிரி என 324 பி1 ன் 110 சங்கங்களில் 90 சங்கத்தை 800 உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆளுநர் கருணாநிதி,

கடந்த ஆறு மாதங்களில் சுமார் இருபது கோடி ரூபாய் மதிப்பிலான சமூக நலத்திட்டங்கள் செய்துள்ளதாகவும்,இந்த விருது வழங்கும் விழாவில்,பசிப்பிணி போக்குவது, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் குழந்தைகளுக்கான புற்று நோய் குறித்த விழிப்புணர்வு என ஹோப்ஸ் எனும் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்திய உறுப்பினர்களுக்கு சரித்திரம் படைத்த சாதனையாளர்கள் விருது வழங்கி கவுரவித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க