• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சொந்த வாகனங்களை,டூரிஸ்ட் வாகனங்களாக பயன்படுத்தியதால் 5 கார்கள் பறிமுதல்

December 1, 2018 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்று வரும் மருத்துவர் மாநாட்டிற்காக சிலர் சொந்த வாகனங்களை,டூரிஸ்ட் வாகனங்களாக பயன்படுத்தியதால் அனைத்திந்திய டூரிஸ்ட் வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 5 சொந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் மருத்துவர்களுக்கான மாநாடு நடைபெற்று வருகிறது.இதற்காக மருத்துவர்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ள 900க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த மாநாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் சொந்த கார்களை பலர் டூரிஸ்ட் கார்களாக பயன்படுத்தி வருவதாக கூறி டூரிஸ்ட் டாக்சி ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்திந்திய டூரிஸ்ட் வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் 300 க்கும் மேற்பட்ட சொந்த வாகனங்கள்,டூரிஸ்ட் வாகனங்களாக பயன்படுத்தியது தெரியவந்தது.இதனால் உடனடியாக அப்பகுதியில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் 5 வாகனங்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.சொந்த வாகனங்களை விட டூரிஸ்ட் வாகனங்களுக்கு அதிக வரி செலுத்தி ஓட்டி வரும் சூழலில்,இது போன்ற செயல்களால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக டூரிஸ்ட் ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க