மதிப்பெண் குறைந்தால் குழந்தையையே திட்டி தீர்க்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் கர்நாடகாவை சேர்ந்த பெற்றோர்51% மார்க் எடுத்த தன் பிள்ளைக்கு பாராட்டு விழா நடத்தி அசத்தியுள்ளனர்.
தங்கள் பிள்ளைகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதே அனைத்து பெற்றோர்களின் ஆசை. இதற்காக தான் அவர்களை நல்ல பள்ளியில் சேர்ந்து செலவு செய்து படிக்க வைக்கிறார்கள். இருப்பினும் அவர்களின் பிள்ளை மதிப்பெண் குறைவாக எடுத்தால் அதற்கான தீர்வை பெற்றோர்கள் யோசிப்பதே இல்லை.மாறாக பிள்ளையை அடிப்பதும், திட்டுவதுமாகவே இருந்து வருகின்றனர். இதுவே வழக்கமாக உள்ளது.
இப்படிப்பட்ட சூழலுக்கு நேர்மாறாக ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. ஆம்! கர்நாடகாவில் நேற்று முன் தினம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இதில் கலபுர்கி பகுதியை சேர்ந்த அசோக் என்ற மாணவன் 51% மதிப்பெண் எடுத்து தேர்வில் வெற்றியடைந்தார்.
மகனின் மதிப்பெண் குறைந்தை பற்றி கவலைப்படாமல் தன் மகன் 51% மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றதை அவரது பெற்றோர், டிஜெ எனப்படும், டிரம்ஸ், பாடல்கள் ஒலித்து, ஆட்டம் பாட்டத்துடன் பாராட்டு விழா நடத்தி கொண்டாடியுள்ளனர்.
இதில் அப்பகுதி சிறுவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு நடனம் ஆடி மகிழ்ந்தனர். மாணவனுக்கு மாலை அணிவித்து விழா நாயகனாக்கி பாராட்டியுள்ளனர் அவரது பெற்றோர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்