• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

5 வயது பெண் குழந்தை காணாமல் போன வழக்கில் குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு

October 11, 2019 தண்டோரா குழு

கோவை அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தை காணாமல் போன வழக்கில் குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரியும், விசாரணை என்ற பெயரில் கிராமவாசிகளை காவல் துறையினர் அடித்து துன்புறுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்.(36). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு வெற்றிவேல் (7) என்ற மகனும் சாமினி என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளனர். ஜெயக்குமார் அவரது மனைவி கவிதா அதே ஊரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5 ம் தேதி வீட்டின் அருகில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த சாமினி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குழந்தை காணாமல் போய் ஏழு நாட்கள் ஆகியும் எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனிடையே குழந்தையை விரைந்து கண்டுபிடித்து தரக்கோரியும், விசாரணை என்ற பெயரில் கிராமவாசிகளை காவல் துறையினர் அடித்து துன்புறுத்துவதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

மேலும் படிக்க