• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு – பள்ளிக் கல்வித்துறை

February 20, 2019 தண்டோரா குழு

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்தாண்டே நடத்தப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வித்துறை இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது போன்று, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடதுவதற்காக மத்திய அரசு விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. முதலில் இந்த விதிமுறைப்பு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தற்போது அதற்கு மத்திய அரசின் முடிவிற்கு செவிசாய்த்துள்ளது.

இதனை தொடர்ந்து மத்திய அரசின் ஆலோசனைப்படி 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத்தேர்வை நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

அதில் “5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளியில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50 தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு மாணவர்கள் ரூ.100 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணிநேரம் நடைபெறும்” என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க