• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை காணவில்லை – ஆட்சியரிடம் மனு

December 12, 2022 தண்டோரா குழு

அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரைவையினர் 5ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை காணவில்லை என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் திருச்சி குணசீலம் கிராமத்தில் 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஞானவர்மன் என்கிற சோழ மன்னரால் கட்டப்பட்ட பழமையான கற்கோவிலையும்-இந்திரன் சிலை உட்பட்ட பிரதான சின்னங்கள் அளிக்கப்பட்டு அந்த இடத்தில் இருந்த பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் மற்றும் தேவேந்திரன் சிலை மாயமாகியுள்ளது.

மேலும் அந்த இடத்தில் இருந்த கோவில்கள் முழுமையாக இடிக்கப்பட்டு,கோவையை சேர்ந்த தனியார் ஜூவல்லரி உரிமையாளரும்,கோவிலின் அறங்காவலரும் கோவிலில் விதிகளை மீறி நடந்துள்ளதாகவும், முன்னதாக இருந்த சிலைகள், தேவேந்திரப் பெருமான் குறித்த அடையாளங்கள் உள்ளிட்டவையினை கண்டுபிடித்து தருமாறும், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

மேலும் படிக்க