• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

472 மகள்களிடம் வாழ்த்துப் பெற்ற முதல் தந்தை.

June 20, 2016 தண்டோரா குழு

எல்லோருக்கும் தந்தை இறைவன். 500 மகளுக்குத் தந்தை இந்த 47 வயதான மகேஷ்சவானி, 472 தந்தையற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்து அனைவராலும் பாபா(அப்பா) என்று அழைக்கப்படுபவர் இவர்.

பெண்குழந்தை பிறந்தால் சொத்து கரைந்து விடுமே என்று சுணங்கும் மனிதர்களுக்கிடையில் தான் பெறாத பெண் குழந்தைகளுக்குத் தந்தையாக தன் சொத்தைக் கரைக்கும் இவர் ஒரு வித்தியாசமான மனிதர்.

பாவ் நகரிலுள்ள ரபர்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது தந்தை வல்லப்பாய் சவானி 40 வருடங்களுக்கு முன்பு இவ்விடத்தில் குடியேறியவர். வைரம் பட்டை தீட்டும் தொழிலில் தொடங்கிய இவரது வியாபாரம் நாளடைவில் வைரக்கடை வைக்குமளவிற்குச் செழித்தோங்கியது.

மகேஷ் சவானியும் வைரத்தொழில், மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட தொழில் ஆகியவற்றில் கவனம் செலுத்திவந்தார். தன்சகோதரரின் இரு பெண்களுக்கு, அவர்கள் தந்தை இறந்துவிட்டமையால் கன்னிகாதானம் செய்து திருமணத்தை சவானி நிறைவேற்றி வைத்தார்.

அந்தச் சம்பவத்தின் தாக்கத்தால் தந்தை இல்லாத பெண்களுக்குத் திருமணம் செய்துவிக்க நிச்சயித்தார். ஒரு தாய் தன் பெண்ணுக்குத் தனியாக விவாகம் செய்ய முற்படும் போது படும் அவஸ்தைகளைக் கண்டு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய முடிவெடுத்தார்.

2008 முதல் தன் முடிவிற்கு உருவம் கொடுக்கத் தொடங்கினார். தந்தையில்லா பெண்களுக்கு விவாகம் செய்துவைப்பது மட்டுமன்றி, அவர்களது வாழ்க்கைத் தேவைகளையும் பூர்த்தி செய்வார்.

அவருடைய வியாபாரம் செழிப்பாக நடந்த படியால் ஒரு பெண்ணிற்கு 4 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து ஆடம்பரமாகவே திருமணம் நடத்த அவரால் முடிந்தது.

பெண்களுக்குச் சீதனமாக தங்க நகைகள் வெள்ளிப் பாத்திரங்கள் போன்றவை மட்டுமன்றி வீட்டுக்குத் தேவையான பாத்திரங்கள், மின்சார சாதனங்கள் முதலியவற்றையும் அளிப்பது இவரது வழக்கம். எந்தவித சாதி, மத பேதமுமின்றி, தந்தை இல்லாத ஏழைப் பெண்களை தன் பெண் போலப் பாவித்து திருமணத்தை முடிக்கும் பரந்த மனமுடையவர் இவர்.

நஹிதா பானு என்ற பெண் தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு 2014ம் ஆண்டு அரிஃவ் என்பவரை மணக்க உதவி செய்தவர் மகேஷ் சவானி. தன்னுடைய தந்தையைக் காட்டிலும் உயர்ந்தவர் மகேஷ் பாபா என்றும், எல்லாப் பெண்களுக்கும் இவரைப் போல் தந்தை அமைய வேண்டும் என்றும் நெகிழ்ச்சியுறக் கூறியுள்ளார்.

ஹீனா கதிரியா என்ற பெண்ணின் தந்தை 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அப்பெண்ணுக்கும் தந்தையாக இருந்து உதவி செய்தவர் மகேஷ் சவானி. ஒரு செய்தி போதும், மகேஷ் பாபா உதவிக்கு ஓடி வந்து விடுவார் என்று நன்றியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க