• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகுமார் கொலை வழக்கு: வாக்குமூலம் அளிக்க தேசிய புலனாய்வு முகமை வற்புறுத்துவதாக மாநகர காவல் ஆணையரிடம் மனு

May 2, 2018 தண்டோரா குழு

சசிகுமார் கொலை வழக்கில் தொடர்புபடுத்தி வாக்குமூலம் அளிக்க தேசிய புலனாய்வு முகமை வற்புறுத்துவதாக கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் குடும்பத்துடன் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ஃபெபின் ரகுமான் கல்லூரி பட்டபடிப்பு முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி கோவை பந்தைய சாலை பகுதியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜராக ஃபெபினுக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பி உள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற ஃபெபினிடம் சசிகுமார் கொலை வழக்குகளை தொடர்ப்பு படுத்தி சில குற்றசாட்டுகளை கூறி அதை ஒத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் தன்னை வற்புறுத்தியதாக ஃபெபின் தெரிவித்தார்.மேலும் மூன்று நாட்கள் எந்த சம்மனும் அனுப்பாமல் விசாரணைக்கு அழைத்து இந்து முன்னனி பேனர்களை புகைப்படம் எடுத்ததாகவும், அதில் சசிகுமார் படத்தையும் எடுத்ததாகவும் ஒப்புக்கொள்ள வற்புறுத்தியதோடு, குற்றசாட்டுகளை ஒத்துக்கொண்டால் தன்னை விடுவிப்பாதகவும், இல்லையென்றால் தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்வோம் என மிரட்டியதாக தெரிவித்தார்.

மேலும்,உடனடியாக சம்மன் அனுப்பி சென்னை வர என்.ஐ.ஏ தன்னை அழைத்த போது பயந்து வீட்டை விட்டு காணமல் சென்று விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.இந்நிலையில் தன்னை வேண்டுமென்றே தேசிய புலனாய்வு முகமை மிரட்டுவதாகவும்,தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஃபெபின் குடும்பத்துடன் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தார்.

மேலும் படிக்க