• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

45 மின்னணு தராசுகள், 9 கை தாராசுகள், 20 எடைக்கற்கள் பறிமுதல்

December 20, 2022 தண்டோரா குழு

கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) தலைமையில் அனைத்து தொழிலாளர் துணை ஆய்வர்கள்,தொழிலாளர் உதவி ஆய்வர்கள் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் இணைந்து உக்கடம், புலியகுளம், சவுரிபாளையம், மசக்காளிபாளையம் போன்ற பகுதிகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் எடை குறைவு, முத்திரை, மறுமுத்திரையிடப்படாத எடைளயவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகள், மறுபரிசீலனை சான்றுகாட்டி வைக்கப்படாமை, சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காதது தொடர்பாக சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

136 மீன் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 45 மின்னணு தராசுகள், 9 கை தாராசுகள், 20 எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இது போன்ற ஆய்வு மீண்டும் வரும் 25ம் தேதி நடத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க