• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக செய்தி தொடர்பாளர்  கே.சி பழனிசாமி கட்சியிலிருந்து  நீக்கம்

March 16, 2018 தண்டோரா குழு

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான கேசி. பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என கூறியிருந்தார். இந்நிலையில்,  அதிமுக செய்தித்தொடர்பாளர் கே.சி.பழனிசாமியை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதால் அவரை நீக்கியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், கட்சி உறுப்பினர்கள் யாரும் கே.சி.பழனிசாமியுடம் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.

அதிமுகவில் இருந்து நீக்கப்படும் இரண்டாவது செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க